pungudutivu

நினைவேறுகிறது…

வெள்ளி, 25 மே, 2012


சுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான "புங்குடுதீவு மான்மியம்" நூல் வெளியீடு. இன்னும் நிகழ்வுகள் தொடர்கின்றன .ஞாயிறன்று கனடா மொன்றியலில் .

 ""புங்குடுதீவு மான்மியம் "" நூல் வெளியீட்டு விழா ஐரோப்பிய  நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து தமது சிறப்புமிகு பயணத்தை முடித்துக்கொண்டு கனேடிய பழைய மாணவர்சங்க பிரதிநிதிகள் மூவரும் கனடா திரும்பியுள்ளனர் . இங்கிலாந்து தலைநகர் லண்டனில்  புங்குடுதீவு நலன்புரி சங்கம் இந்த வெளியீட்டை சிறப்பாக நடத்தி வைத்தது .பாரிசில் உயர்திரு .இலங்கையர் கனகசபை அரியரத்தினத்தின் முயற்சியில் ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது . சுவிட்சர்லாந்தில் பெர்னில் உள்ள ரூபிகேன் என்னும் இடத்தில் இந்த வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .இந்த விழாவில் திரு.செல்வம் அடைக்கலநாதன் (பா.உ. த.தே.கூ.) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பற்றிய விழா இனிதே நடைபெற்றது . சுவிசில் விழா நடைபெற்ற அதே நாளில் வேறு பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருத போதும் நூறு பேர் வரையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . தவிர்க்க முடியாத காரனகளால் சமூகமளிக்க முடியாமல் போன மக்கள்  கனடா பிரதிநிதிகளை சந்தித்து நூலை பெற்றுக் dகொண்மை வெற்றிகரமாக நடந்தேறியது .அத்தோடு தங்கள் இல்லங்களுக்கு வரவழைத்து வரவேற்பு வழங்கி நூலை வந்கியமையும் aமறக்க முடியாததாக அமைந்தது .சுவிசில் மட்டும் சுமார் ஏழாயிரம் பிரான்குகளுக்கும் சற்று அதிகமாக நூலுக்கான வரவு நிதியாக கிடைத்தமை ஒரு வரலாற்றுப் பதிவாகும் எல்லோருக்கும் ஏற்பாட்டாளர்கள்  தமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் 

சுவிஸ் வெளியீட்டு விழாவையொட்டி சகல வழிகளிலும் எமக்கு உறுதுணையாய் இருந்து ஒத்துழைத்த பின்வருவோருக்கு விசேசமாக நன்றி தெரிவித்துக்  கொள்கிறோம் 

இராசமாணிக்கம் ரவீந்திரன் 
அரியபுத்திரன்  நிமலன் 
சிவசம்பு சந்திரபாலன் 
செல்லத்தம்பி சிவகுமார் 
சுப்பிரமணியம் சண்முகநாதன் 
அருணாசலம்  திகிலழகன் 
வில்வரத்தினம் பகீரதன் 
தம்பையா பிரேமானந்தன் 
துரைராசா சுரேந்திரராசா 
கந்தையா கணேசராசா 
கந்தையா தவசெல்வம் 
சின்னதுரை நாகரத்தினம் 
ராஜேந்திரம் இந்திரசீலன் 
ராசையா  சண்முகராசா 
வேலாயுதபிள்ளை கனகராசா 
கந்தையா மணியழகன் 
சோமசுந்தரம் கைலைவாசன் 
தியாகராசா  செல்வேந்திரராசா 

சனி, 7 மே, 2011





வியாழன், 20 ஜனவரி, 2011


அன்பான அறிவித்தல்
_______________________
இந்த தளம் தயாரிப்பு நிலையில் இருப்பதால் சில தவறுகள் ஏற்படும் வருந்த வேண்டாம் காலக்கிரமத்தில் சீரமைக்கப்படும் .முக்கியமாக யுனிகோட் எழுத்தாக்க முறையில் வரும் நகர னகர லகர ழகர பிழைகள் இருப்பதை நாம் அறிவோம் :நன்றி:

வரலாறு

வரலாறு 
_________________


சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி சிங்காரமாய் கோலோச்சும் முருகப்பெருமானின் அழகுமிகு திருத்தலம் காட்சியளிக்கும் .கம்பீரமாய் எழுந்து நிற்கும் சிற்பத் தேர் முட்டியின் பின்னே பனங்கூடலின் பின்னணியில் அருள் புரியும் பாலசுப்பிர மணியர் எழுந்தருளி இருக்கிறார்                                                                                   .                             இளந்தாரி    நாச்சிமார் கோவில் என்ற தொன்மை பெயரை கொண்ட இவ்வாலயம் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் . நானூறு ஆண்டுகளுக்கு முன்னே வள்ளி நாச்சியார் அயல் கிராமத்தில் இருந்து மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவரை திருமணம்  செய்தார் .மணமகளான நாச்சியார் மணமகன் வீட்டில்  மூன்று நாள் தங்கி வழமைப்படி இருந்தார் .மூன்றாம் நாள் காலை  நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளர் ´´நீர் புகுந்த  வீடு எம்மோடு சேர்ந்து வாழும் தகுதி அற்றது .என்று ஏளனம் செய்தார்.இதனை கேட்டு கவலையுற்ற நாச்சியார் அதே இடத்திலேயே தனது தாலிய கழற்றி அந்த வயல் வரம்பில் ஒரு கல்லின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டு தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார் . இதனை கண்ட இவரது கணவர் அன்று முதல் அதே இடத்தில அந்த கல்லை வைத்து ஒரு கோவிலை உருவாக்கி வழிபட்டு தானும் மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார் .வள்ளி நாச்சியார் தனது பிறந்த ஊருக்கு சென்று அங்கே உள்ள இழுப்பண்ணை  என்னும் இடத்தில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டார் அந்த ஆலயம் வல்லன் இழுப்பண்ணை நாச்சிமார் கோவில் என் இப்போதும் அழைக்கப் படுகின்றது                                                                                                                                                       .                                                                                                                                                  மடத்துவெளி நாச்சிமார் கோவிலின் தெற்கில் ஒரு அரசமரம் நின்றது அங்கே ஒரு பாம்பு ஒன்று வாழ்ந்து வந்ததாகவும் கூறப் படுகின்றது .இந்த அரச மரத்தின் வேரானது நீளமாக பக்கத்தில் இருந்த சுண்ணாம்பினால் ஆனா மடப்பள்ளி அடிப்பக்கம் வரை ஒரு மனித கை கால் உருவில் படர்ந்திருந்ததகவும் வரலாறு கூறுகிறது .
இவ்வாலயம் 1960 ஆண்டு காலத்தில் புனரமைக்கப் பட்டு அதன் உரிமையாளராக திரு வேலுப்பிள்ளை சபாபதி இருந்து வந்தார் .இவரது வறுமை காரணமாக தொடர்ந்து இவ்வாலயத்தை வர்த்தகர் வி.அருணாசலம் பொறுப்பேற்ற பின்னர் முற்று முழுதாக ஆலயம் புனரமைக்கப்பட்டது .கருவற்றின் உள்ளே வேலாயுதமும் வடமேற்கு மூலையில் நாச்சியாரின் விக்கிரகமும் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஆலயத்தின் பெயரும் பாலசுப்ரமணியர் கோவில் என்றும் மற்றப் பட்டது.                                                                              


சின்ன    நல்லூர் என்று செல்லமாக அழைக்கப் படும் இந்த ஆலயத்தில் நல்லூர் ஆலயம் போன்றே சரியான நேரத்தில் பூஜை நடைபெற்று வருகிறது.அத்தோடு இவ்வாலயத்தின் திருவிழாக்கள் மிக கட்டுப் பாட்டுடன்  முறையான சைவ விதிமுறைக்கு ஏற்ப நடைபெறுவது வழக்கம் .திருவிழா தினமும் பகலும் இரவும் பன்னிரண்டு மணிக்கே முற்றாக முடிவுறும் அத்தோடு சமய கொள்கைகளுக்கு உட்படாத சினிமா பாடல்களை கொண்ட நிகழ்சிகள் கேளிக்கை வேடிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்ட நிலையிலேயே திருவிழா நடைபெறும் .திரு அருணாசலத்தை தொடர்ந்து வர்த்தகர் வி.இராமநாதன் பொறுபேற்றார் .இவரது முயற்சியில் இவ்வாலயத்தில் எழுபதுகளின்  ஆரம்பத்தில் புன்குடுதீவிலேயே முதன் முதலாக முறையான முற்றிலும் சித்திர வேலைபாட்டில்  முடி வரை அமையபெற்ற நல்லோர் ஆலயத் தேரை ஒத்ததான சித்திரத் தேர் வீதியுலா வந்த பெருமை பெற்றது  .அத்தோடு புங்குடுதீவில் நுழைந்ததுமே பார்போரை வசீகரிக்கும் அழகான தேர்முட்டியும் அமைக்கப் பட்டது.மடத்துவெளி பிரபல வர்ததகர் அண்ணாமலை மாணிக்கம் அவர்கள் தனது மனைவி நினைவாக ஒரு அன்னதான மண்டபத்தை அமைத்து கொடுத்துள்ளார் .திருவிழாக் காலத்தில் இங்கே அன்னதானம் நடைபெறும் .இந்த பணியை சிறப்பாக மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் தொடர்ந்து செய்து வந்தனர் .1987 முதல் இந்த அன்னதான பணியை அமுதகலசம் என்னும் நாமமிட்டு தமது சொந்த பொறுப்பில் நடத்தி சிறப்பித்தனர் .வர்த்தகர் பா.பாலசுந்தரம் தாகசாந்தி நிலையத்தை திருவிழாக் காலங்களில் நடாத்தி வருகிறார் . 




இவ்வாலயத்தின் கொடியேற்றம  எட்டம் திருவிழா பூங்காவனம் தீர்த்தம் உட்பட சிறப்பான சித்திரதேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும் அன்றைய தின பச்சை சாத்தும் காட்சி கண் கொள்ளா வகையில் கணக் கூடியதாகவிருக்கும் .மேலும் சூரன்போர் வாழை வெட்டு கந்தசஸ்டி திருவெம்பாவை போன்ற விழாக்களும் மிக சிறப்பானதாக இருக்கும் திருவெம்பாவை அதிகாலை 4 மணிக்கு ஆரம்ப மணியோசையுடன் தொடக்கி திருப்பள்ளி எழுச்சி படி துயில் எழுப்புதல் மங்கள வதியகசேரி கூட்டு வழிபாடு என வரிசையாக நடைபெட்டு காலை ஆறரைக்கு முடிவுறுதல் வரலாற்றுபதிவாகும்.இதே காலத்தில் கூட்டு வழிபாட்டு மன்றத்தினர் அதிகாலையிலேயே சங்கு சேமக்கலம் சகிதம் கிராமந்தோறும் பள்ளி எழுப்பும் தொன்மை வாய்ந்த நிகழ்வை மேற்கொள்வர்.
இவ்வாலயத்தின் கூட்டு வழிபாடு மன்றம் தீவுப்பகுதியில் மிக சிறப்பு பெற்றது.இந்த பணியை பொறுப்பாக நான்கு தசாப்தமாக நடத்தி வந்த பெருமை உள்ளோர் வர்த்தகரான கநதையா அம்பலவானரையே சாரும் ,இவரது நிர்வகிப்பில் சீதாதேவி மகன். (பெயர் பின்னர் சேர்க்கப்படும )சீவரத்தினம் வே பாலசுரமணியம் நா.விநாயகமூர்த்தி ந.சண்முகநாதன் ந.சோமசுந்தரம் சி.பேரின்பநாதன் ,அ.தியாகலிங்கம்,இ.ஞானசேகரம் .சிவ-சந்திரபாலன் ,அ.சிவகுமார் ,அ,திருவருட்செலவன் ,இ.பாலகுகன் ,க.ரவீந்திரன் ,கு.கிருபானந்த,சே.இந்திராதேவி ம.கமலரன்ஜினி ,சே.தனலட்சுமி வி பத்மினி இ திருக்கேதீச்வரி க.அருந்தவநாதன் .நா.செல்வநாயகி நா.சவுந்தரநாயகி.கி.சசிமாலா பா.யோகேஸ்வரன் க.கைலயனாயகி போன்றோர் மிகவும் தரமான சீரான கூட்டு வழிபட்டு முறையை திறம்பட நடத்தி வந்தனர்.


இவ்வாலயத்தின் நிர்வாகப் பணிகளில் வே.சபாபதி வி.அருணாசலம் .வி.இராமநாதன் அ.பா.பாலசுப்ரமணியம் இ.குலசேகரம்பிள்ளை க.தியாகராசா வி.சுப்பிரமணியம் பொ.நாகேசு க.அம்பலவாணர் க.நாகநாதி கு கதிர்காமு கோ .நாகேசு பரராசசிங்கம் கி.சவுந்தரநாயகி வே.இளையதம்பி அ.இளையதம்பி நடராசா க.வீரசிங்கம் பா.பாலசுந்தரம் து.ரவீந்திரன்.அ.சண்முகநாதன் ந.தர்மபாலன் வே.சுப்பிரமணியம் கு.கிருபானந்தன் ஆகியோர் சிறப்பாகக் கடை ஆற்றியிருந்தனர் .
1991 காலப்  பகுதியில் இராணுவம் உட்புக பெரும்பாலான மக்கள் இடம்பெயர ஆலயம் பொலிவிழந்து போனது .பின்னர் சோ.சிவலிங்கம் தலைவராகவும் கு.கிருபானந்தன் செயலாளராகவும் கி.சவுந்தரநாயகி பொருளாளராகவும் கொண்ட புதிய பரிபாலன சபையும் உருவாகியது.பின் வந்த காலங்களில் தம்பிபிள்ளை என்பவர் தானே தனித்து ஆலயத்தை துப்பரவு செய்து தினமும் விளக்கேற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது 2002 முதல் மீண்டு நித்தியா நைவேத்திய கிரியைகள் நடைபெற்று வருகின்றன.அண்மைக்காலமாக இந்த ஆலயத்தினை மீள்நிர்மானம் செய்து ராஜகொபுரதினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் வி.இராமநாதன் அவர்கள் முருகனடி சேர்ந்தமை துரதிர்ஷ்டமானது .பொதுச்சேவையில் வரலாறு களை பாதிக்கும் மடத்துவெளி இளைஞர் தலைமுறை உலகெங்கும் பரவி வாழும் காரணத்தால் இனிவரும்காலங்களில் இவ்வாலயம் மேலும் சிறப்பு பெறும் என நம்புவோமாக 

வியாழன், 9 செப்டம்பர், 2010

மடத்துவெளி சனசமடத்துவெளி சனசமூக நிலையம்மூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக அமைப்பாகும் . இந்த நிலையம் முறைப்படி ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு தைத்திங்கள் பதினைந்தில் யா/கி/ச/௩௭சநி /௨௬௬ என்ற பதிவிலக்கதுடன் ஆரம்பிக்கபட்டு கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலய வளவினுள் அமரர் க.ஐயாத்துரை ஆசிரியர் அவர்களின் பாரிய முயற்சியினால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வந்தது.பின்னர் இந்த சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட அமரர்.ச.சொக்கலிங்கம் அவர்கள் இந்த சனசமூகநிளையத்தை திறம்பட செயற்படுத்தி வந்திருந்தார்.காலக்கிரமத்தில் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட நிலையம் ஒரு ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது. அறுபதுகளின் இறுதியில் கமலாம்பிகை வித்யாலய பழைய மாணவர்களான வ.நல்லையா (இராமச்சந்திரன் -நூலகர் )மகேஸ்வரன் (மலைப்பாம்பு) ,எ.இராசரத்தினம் (மு-கி-ச-உறுப்பினர் ,இ.இராசமாணிக்கம் (இசைக்கலைஞர் )போன்றோர் இணைந்து ஒரு சமூக சேவைக்கான எழுச்சியை முனைப்பாக்கினர்..இந்த கால கட்டத்தில் கமலாம்பிகை வித்யாலய வளவினுள் ஒரு கலை விழாவினையும் பின்னர் வல்லன் சண்முகநாதன் வித்தியாசாலை வளவினுள் ஒரு சிவராத்திரி விழாவினையும் நடாத்தியதோடு அந்த விழாக்களிலேயே நாடகங்களையும் அரங்கேற்றி தமது கலைத் தாக்கத்தினையும் வெளிபடுதினார்கள் . இத்தனைக்கும் பின்னால் புங்குடுதீவு கிழக்கின் சிற்பி என்றும் புரட்சியாளன் என்றும் போற்றப்படும் கண்ணாடி என்று செல்லமாக அழைக்கப்படும் அருணாசலம் சண்முகநாதன் இந்த கிராமத்தின் சுமைகளை தூக்கி தன் தோளிலே வைத்தான் . அவனது வழிகாட்டலில் புதிய இளைஞர் பாசறை ஒன்று கட்டி எழுப்ப பட்டது .முன்பு இயங்கி வந்த சனசமூக நிலையத்தின் எச்சங்களை துழாவி எடுத்தான்.ஒரு சாய்வு படிக்கும் மேசை உடனும் இரண்டு வாங்குகளினுடனும் எச்சங்களாக சொக்கலிங்கம் ஆசிரியர் வீட்டில் சனசமூகநிலையம் சுருங்கி போய் கிடந்தது.வீறு கொண்டெழுந்த சண்முகநாதன் இராமச்சந்திரன் .பாலசுப்ரமணியம் ,தர்மபாலன் போன்ற இளைஞர்களை இணைத்துக்கொண்டு இயங்க ஆரம்பித்தான். முதல் காரியமாக முருகன் ஆலய அன்னதான மடத்து மண்டபத்தில் இளமுருகன் சிறுவர் பாடசாலையை ஆரம்பித்து அதன் ஆசிரியையாக எஸ்.கமலாம்பிகை அவர்களை நியமனம் செய்தார்கள் . கிராமத்து இளைஞர்கள் கிளிதட்டு விளையாட்டில் இருந்து கரப்பந்தட்டதுக்கு மாறினார்கள்,விளையாட்டோடு நிற்காமல் ஒரு தற்காலிக வாசிகசாலையை அலுவலகத்தோடு சேர்த்து எ.வே.இளையதம்பி அவர்களின் கட்டிட தொகுதிக்கு பக்கத்தில் இடப்பக்கமாக நிறுவபட்டது .தரை சீமேந்தினாலும் சுவர் பகுதியைமரத்தினாலும் கூரையை ஓடு கொண்டும்எளிமையாக அமைக்கபட்ட சனசமூகநிலையம் எல்லோரும்பாராட்டும் விதமாக ஒரு இளைஞர் பாசறையாக அத்திவாரமாக அடித்தளமிட்டது. சனசமூகநிலயத்தின் நிர்வாகசபை இ.குலசேகரம்பிள்ளை ஆசிரியரின் தலைமையில்புதிய சரித்திரம் படைக்க புறப்பட்டது. சண்முகநாதனின் சிறந்த வழிகாட்டலிலும் சேவை மனம் படைத்த இளைஞர்களின் திறமையினாலும் சிறப்பாக செயல் பட்டது.சனசமூக நிலையத்தின் சிறப்பான தடைகள் இல்லாத வாசிகசாலை செயல்பாடு புங்குடுதீவு மக்களின் உள்ளதை கொள்ளை கொண்டது மறக்க முடியாதது. சனசமூகநிலயத்தின் முன்னணி வழிகாட்டிகளாக போசகர்களாக போ.நாகேசு (வர்த்தகர்),க.தியாகராசா ஆசிரியர் ,ஆகியோர் முன்னிற்க எ.சண்முகநாதன்,என். தர்மபாலன் எஸ்.எம்.தனபாலன் சிவ.-சந்திரபாலன் மு.வேலுப்பிள்ளை பொன்.அமிர்தலிங்கம் க.சந்திரசேகரம் ஆகியோரின் நிர்வாக திறனில் நிலையம் அபரிதமான வளர்ச்சி கண்டது. பதவி ஆசை இல்லாத இளைஞர்களை அந்த பாசறை கொண்டிருந்தது என்பதை பெருமையாக சொல்லி கொள்ளவேண்டும் .மூத்த உறுப்பினர்கள் பின்னே வந்த மிக சிறிய இளைஞர்களிடையே நிர்வாக பதவிகளை கொடுத்து தாங்கள் வழிகாட்டி கொண்டிருந்தது சிறப்பான ஒரு அமசமாக மிளிர்ந்ததேம். அடுத்த தலைமுறையாக ப.யோகேஸ்வரன்எ.திகிலழகன் எம் .முத்துகுமார் ,எஸ்.எம் .குணபாலன்.எ.சதாசிவம்,கு.ஜெகநாதன் .வே.கனகராசா.தா.சிவகுமார்,ம.மோகனபாலன் து.ரவீந்திரன் எஸ் .சிவலிங்கம் ,க.உலகேஸ்வரன்,தி.கருணாகரன் ,சி.விசயன் ,இ.ரவீந்திரன் .எ.பாலசுந்தரம்.கே.ரவி.எஸ்.சட்சிதானந்தன் சின்னதுரை ,சு.சண்முகநாதன் ஐ.தர்மகுலசிங்கம்கா.நாகரத்தினம் தா.சிவபாலன்.என்ற வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளமே உருவானது.சனசமூக நிலையத்தின் சீரிய செயற்பாடு கண்ட வர்த்தகர் எ.வே.இளையதம்பி அவர்கள் சனசமூகநிலையம் அமைந்திருந்த காணியைஇனாமாக தாரை வார்த்து கொடுத்து பெருமை தேடிக்கொண்டார். நிலையத்துக்கு ஒரு இரட்டை மாடி கட்டிடத்தை நிறுவ சண்முகநாதன் திட்டம் வகுத்திருந்தார்.இடைநடுவில் அவர் கனடாவுக்கு இடம்பெயர அப்போதைய நிதிநிலைமையை கணக்கிலெடுத்து கொண்ட ந.தர்மபாலன் திட்டத்தை மாட்டி இப்போதைய அமைப்பில் நிலையத்தை அமைக்கமுன்னின்று பாடுபட்டார்.தமக்கென காணி கிடைத்ததும்துரிதமாக செயல் பட்ட நிலையத்தினர் நிரந்தரமான ஒரு கட்டிடத்தை அழகாக அமைத்து ஒரு சாதனையை படைத்தனர். வாசிகசாலை சிறப்பாக வடிவமைக்கபட்டு அணைத்து பத்திரிகைகள் சஞ்சிகைகளும் வசிப்புக்கென வைக்கபட்ட சிறப்பை கொண்ட வரலாறை படைத்திருந்தது.கிராமம் பூராக திரட்டபட்ட சுமார் ௫௦௦நூல்களைக் கொண்டதோடு வாசிகர்களின் உள்ளத்தை மகிழ்வூட்டவென வானொலிசெவையையும் வழங்கி இருந்தது . வாசிகசளைக்கென வீரகேசரி ஈழநாடு மித்திரன் தினகரன் சுதந்திரன் போன்ற பத்திரிகைகளும் குமுதம் ஆனந்தவிகடன் ராணி தேவி சுடர் சிரித்திரன் இதயம் சாவி பாக்யா மல்லிகை போன்ற வார இதழ்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக விநியோகிக்கபட்டு வந்தது பெருமையான விசயமாகும். இவற்றை நீண்ட காலமாக பொ.நாகேசு ,எஸ்.கே.மகேந்திரன்,வே.பாலசுப்பிரமணியம்,ப.கனகலிங்கம் ,சிவ.சந்திரபாலன் ,க.உலகேஸ்வரன்போன்றோர் தங்கள் செலவில் வழங்கி வந்தனர். தினசரிப் பத்திரிகைகளை யாழ்நகரில் இருந்து தினமும் காலை நேரத்திலேயே தனது வாகன சேவையில் எடுத்து வந்த பொன்னம்பலம் அவர்கள் (இருபிட்டி)மறக்க முடியாத நன்றிக்குரியவர்.சனசமூக நிலையத்தின் செயல் பாடுகள்------------------------------------------------கிராமத்தின் குடி நீர் பிரச்சினையை தீர்க்க சிறிய கிணறுகளை தோண்டியமைபொதுக் கிணறுகளை தூர் வார்ந்தமை,குளங்களை ஆழமாக்கியமை ,முட்டு முழுதாக மது ஒழிப்பை உருவாக்கி கட்டுப்பாடில் வைத்திருந்தமை ,மீன் பிடி,விநியோகத்தில் சீரான முறையை உருவாக்கியமை,விளையாட்டு துறையை ஊக்குவித்து வாடா மாகாணத்திலேயே சிறந்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட அணிகளை உருவாக்கியமை,கிராமத்தில் எந்த விதமான சமூக சீர்கேடுகளும் இல்லாத கட்டு கோப்பில் மக்களை வழி நடத்தியமை ,ஆலயங்களின் தொண்டில் உதவியமை ,அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுதலை பாதையில் அணி வகுத்தமை மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் உதவியமை பாடசாலை முன்னேற்றத்தில் பங்களிதமை ,கலை விழாக்கள் ,சிவராத்திரி விழாக்கள் என நடாத்தி சிறந்த நாடக கலைஞர்களை உருவாக்கியமை ,நெற்பயிர் செய்கைக்கு ஊக்கம் கொடுத்து விவசாயத்தை மேம்படுதியமை என நீண்டு செல்லும் வரலாறு உண்டு.

வெள்ளி, 12 மார்ச், 2010

சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி சிங்காரமாய் கோலோச்சும் முருகப்பெருமானின் அழகுமிகு திருத்தலம் காட்சியளிக்கும் .கம்பீரமாய் எழுந்து நிற்கும் சிற்பத் தேர் முட்டியின் பின்னே பனங்கூடலின் பின்னணியில் அருள் புரியும் பாலசுப்பிர மணியர் எழுந்தருளி இருக்கிறார் .